ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம்! தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!

You are currently viewing ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம்! தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனாத் தொற்று பரம்பல் உச்ச பெற்றுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (எப்-18) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 723 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 91 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 13 ஆயிரத்து 113 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 70 ஆயிரத்து 391 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு கொரோனாத் தொற்று தொடர் அதிகரிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்-20 முதல் – ஏப்ரல் 30ஆம் திகதி வரை இரவு நேர ஊரடங்கு இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments