கடந்த இரண்டு நாட்களில் ஓஸ்லோவில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற பரிசோதனை செய்யப் பட்டதாகவும்,
அந்த 50 பேரும் பரிசோதனையின் பதில் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளார்கள் என்றும் சுகாதார தொடர்புத் தலைவர் Christian Ekker Larsen கூறியுள்ளார்.
மேலும் சுகாதார திணைக்களம் இன்று வியாழன் கொரோனா வைரஸ் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, 25 விழுக்காடு மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாகலாம் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் தயாராகி வருவதாக கூறியுள்ளனர்.
நிலைமை மிகவும் மோசமானால் மாற்று நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் எடுத்துக்காட்டாக, பள்ளிகள், மழலையர் பள்ளிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் பெரிய ஒன்றுகூடல்கள் போன்றவை இதில் பரிசீலிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.