கச்சதீவு அருகே கடலில் தத்தளித்த இராமேஸ்வர மீனவர்கள் எழுவர் மீட்பு!

You are currently viewing கச்சதீவு அருகே கடலில் தத்தளித்த இராமேஸ்வர மீனவர்கள் எழுவர் மீட்பு!

கச்சதீவு அருகே இலங்கை கடற்படையின் கடல் கண்காணிப்பு கப்பல் மோதியதில் உயிருக்கு போராடிய இராமேஸ்வர மீனவர்கள் 7 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று புதன்கிழமை (19) 500 க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நேற்று புதன்கிழமை இரவு கச்சை தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்து விட்டு இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை 2 மணியளவில் கரை திரும்பும் போது கச்சை தீவு அருகே கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இராமேஸ்வர மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தது மீனவர்களை கைது செய்யும் நோக்கில் அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இதன் போது உயிருக்குப் பயந்து படகு பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சத்தால் மீனவர்கள் தப்பியோடிய நிலையில் மீனவர்களின் படகுகள் மீது ரோந்து கப்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும் விரட்டியடித்துள்ளனர்.

இதன் போது மீனவர் வஸ்தியான் என்பவர் படகு மீது கடற்படையின் கண்காணிப்பு கப்பல் மோதிய நிலையில் குறித்த படகு நடுக்கடலில் மூழ்கியது.

குறித்த படகில் இருந்த சுரேந்திரன், ஜெயபால் ,ஆகாஷ் டேனியல்,ராஜா, ஜெபஸ்தீயான் உள்ளிட்ட ஏழு மீனவர்கள் உயிருக்கு போராடி வந்த நிலையில் சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் குறித்தும், எதிர்வரும் 21ஆம் திகதி (நாளை) மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் உடனடியாக மீனவ அமைப்புக்களை சந்திக்க விரும்புவதாக கூறியதை அடுத்து மீனவர் சங்க பொறுப்பாளர்கள் சென்னைக்கு விஜயம் செய்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments