தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07.06.2023 ) காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமரசமின்றி தமிழர்களின் ஆதரவு குரலாக சிறிலங்கா பாராளுமன்றத்தில் செயல்படுபவராவார் ஆகவே தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை என்கின்ற கொள்கை அடிப்படையில் செயல்படும் முன்னணியின் அபரிமிதமான வளர்ச்சியை முடக்க சிங்கள அரசின் பகிரதபிரயத்தனமாகவே பேரினவாத சிங்கள அரசின் திட்டமிட்ட கைதாகவே இது அமைகின்றது
இந்நிலையில் பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கோல்பர்ன் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கைதுக்கு கண்டம் வெளியிட்டுள்ளார்