தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பானது இன்று- பகல் (09.09.2023) சனிக்கிழமை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் அவர்களும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான நடராஜர்-காண்டீபன் அவர்களும் உடனிருந்தனர்.