கடற்தொழில் அமைச்சர் தமிழ் மீனவர்களுக்கிடையில் பகையினை வளர்க்கின்ற முனைப்பில் அக்கறையாக இருக்கின்றார்-செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு!
கடற்தொழில் அமைச்சராக இருக்கின்ற டக்ளஸ்தேவானந்தா அவர்கள் எப்பொழுதும் தமிழ்மக்களுக்குள் பிழவுகளை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டினைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கின்றார் இந்த அரசிற்கு முண்டுகொடுத்துக்கொண்டு இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை அவர் கண்டும் காணாமல் இருப்பது என்பது அவரும் தமிழக மீனவர்களுக்கும் எங்கள் மீனவர்களுக்கும் இடையில் பகையினை வளர்க்கின்ற முனைப்பில்தான் அக்கறையாக இருக்கின்றார்.என்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று(15.12.2020) நடைபெற்ற மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் போர் காரணமாக வடக்கு கிழக்கு கடற்தொழிலாளர்களின் தொழில் முற்றாக அழிக்கப்பட்டது போர் முடிவடைந்த பின்னர் வடபகுதி மீனவர்கள் கடற்தொழிலை கட்டி எழுப்புவதற்கு தங்கள் சொந்த முயற்சியால் கடன்பட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த வேளையில் தொடர்ச்சியாக தென்னிலங்கiயில் இருந்து வருகின்ற சட்டவிரோத மீன்பிடியாளர்களாலும் இந்தியாவில் இருந்து வருகை தருகின்ற மீன்பிடியாளர்களாலும் தமிழர்களின் மீன்வளம் அள்ளிச்செல்வது மட்டுமல்ல தமிழர்களின் வலைகள் படகுகள் சேதமாக்கப்படுவது அழிக்கப்படுவது என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது.
இந்த செயற்பாடு இலங்கை அரசால் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் வடபகுதியில் இருக்கக்கூடிய தமிழ்மீனவர்கள் தங்கள் பொருளாதாரத்தினை மீள கட்டியெழுப்பாத வாறு அவர்களை அடிமட்ட நிலமையில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக அரசு மேற்கொள்ளம் நடவடிக்கை.
தமிழக மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளில் தமிழர்களின் உரிமைபோராட்டத்திற்கு மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள் அந்த மக்களுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இடையில் நிதந்தர பகையினை ஏற்படுத்தவேண்டும் என்று இரண்டு நாட்டு அரசும் திட்டமிட்டவகையில் மோதவைக்கின்ற சதிமுயற்சியாகவே இந்த அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகளை அனுமதித்துக் கொண்டிருக்கின்றார்கள்
இன்று கடற்தொழில் அமைச்சராக இருக்கின்ற டக்ளஸ்தேவானந்தா அவர்கள் பிச்சைக்காரனின் புண்ணினை தோண்டி பிச்சை எடுப்பதுபோல் அவரின் செயற்பாடுகள் எப்பொழுதும் தமிழ்மக்களுக்குள் பிழவுகளை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டினைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கின்றார்
இந்த அரசிற்கு முண்டுகொடுத்துக்கொண்டு இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை அவர் கண்டும் காணாமல் இருப்பது என்பது அவரும் தமிழக மீனவர்களுக்கும் எங்கள் மீனவர்களுக்கும் இடையில் பகையினை வளர்க்கின்ற முனைப்பில்தான் அக்கறையாக இருக்கின்றார்.
எங்கள் மீனவர்கள் பொருளாதாரரீதியில் முன்னேறாக்கூடாது மீனவர்கள் முன்னேறுவார்களாக இருந்தால் இந்த மாவட்டத்திற்கு அபிவிருத்திக்காக அதிகளவான நிதியினை அள்ளிவழங்கக்கூடியளவிற்கு செல்வம் கொளிக்கும் தொழிலாக இது இருக்கின்றது.
ஆனால் அப்படி மீனவர்கள் சொந்தக்காலி வந்துவிடாமல் அவர்கள் தொழில் அழிக்கப்பட்டு நாளாந்தம் கையேறு நிலையில் கையேந்துகின்றபோது தான் கடற்தொழில் அமைச்சராக இருந்து அரசாங்கத்திடம் இருந்து பெற்று பிச்சைபோடுவது போன்று போட்டு தான் தொடர்ந்து வாக்கு வங்கியினை தக்கவைக்கவேண்டும் என்ற நிலைதான் இதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த அத்துமீறிய செயற்பாடுகளுக்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் இந்தவிடையத்தினை கையாழுகின்ற பொறுப்பினை எங்கள் மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் எடுத்ததற்கெல்லாம் இறைமை என்று பேசுகின்ற அரசாங்கம் எங்கள் மக்களின் தொழில் முற்றாக அழிக்கப்படுகின்றபொழுது என்ன செய்கின்றார்கள்?
இந்த நிலமை நீடித்தால் மக்கள் சட்டத்தினை கையில் எடுக்கவேண்டிய நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் நினைவு படுத்துகின்றோன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்