காணாமல் போன “டைட்டான்” நீர்மூழ்கியை தேடும் பணியில், சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கியொன்று அனுப்பிவைத்த தகவல்களின் அடிப்படையில், சம்பவ இடத்தில் கடற்கலத்தின் சிதைவுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க கரையோர காவல்துறையை ஆதாரம் காட்டி, செய்தியொன்று வெளியாகியுள்ளது.
எனினும், குறித்த சிதைவுகள், காணாமற்போன நீர்மூழ்கியினுடையதா என்பது இன்னமும் நூறு சதவிகிதம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.