கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்: சீமான் வேண்டுகோள்!

You are currently viewing கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்: சீமான் வேண்டுகோள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி ‌மலையை உடைத்துத் தகர்த்து, கனிம வளங்களைக் கொள்ளையடித்து கேரளாவுக்குக் கடத்தும் கொடுஞ்செயலுக்கு எதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குத் தொடுத்து அடக்குமுறையை ஏவும் திமுக அரசின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முன்னதாக, கனிம வளக்கொள்ளையை தடுக்கப்போராடியபோது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தம்பி சுஜினைக் கொடூரமாகத் தாக்கியக் காவல்துறையினர், தற்போது கனிமவளக்கற்களைக் கொண்டுசென்ற பார உந்துகள் குறித்து புகார் தெரிவித்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 10 பேர் மீது வழக்குத் தொடுத்திருப்பது ஏற்கவே முடியாத அட்டூழியமாகும்.

600-க்கும் மேற்பட்ட வண்டிகள் கனிம வளக்கடத்தல் நடக்கிறது? தொடர் வளவேட்டையின் விளைவாக, குவாரிகளின் அருகேயுள்ள வீட்டுச்சுவர்களில் கீறல்கள் விழுந்துள்ளதோடு, சுற்றியுள்ள பசுமைவனங்கள் அனைத்தின் மேல் தூசியும், மாசும் படர்ந்து சூழலியல் மண்டலமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தோடு, ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களாலும், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, கேரளாவுக்குக் கனிமவளங்கள் கடத்தப்படும் கொடுஞ்செயலை விரைந்து தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், வளக்கொள்ளையர்களை சட்டத்தின் துணையுடன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமெனவும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments