கனேடிய கோடீஸ்வரர் மீது புகார் அளித்த 28 பெண்கள்!

You are currently viewing கனேடிய கோடீஸ்வரர் மீது புகார் அளித்த 28 பெண்கள்!

கனடாவின் மாண்ட்ரீல் பகுதி கோடீஸ்வரர் ஒருவர் மீது புதிதாக இருவர் உட்பட 28 பெண்கள் வரிசையாக புகார் அளித்துள்ள சம்பவத்தில் விசாரணை முன்னெடுக்கபப்ட்டுள்ளது. தொடர்புடைய 28 பெண்களும், தாங்கள் சிறார்களாக இருந்த போது மாண்ட்ரீல் கோடீஸ்வரர் ராபர்ட் மில்லர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

பணம் மற்றும் பரிசுப் பொருட்களால் தங்களை அவர் ஆசைக்கு இணங்க வைத்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 1992 முதல் 2012 வரையில் பாதிக்கப்பட்ட பெண்களே தற்போது ராபர்ட் மில்லர் மீது புகார் தெரிவித்தவர்கள்.

மேலும், ராபர்ட் மில்லர் மீது பலர் புகார் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் வாக்குமூலம் அளிக்க மறுத்துள்ளதால், அவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக் பகுதிக்கு வெளியே குடியிருக்கும் பெண்களும் ராபர்ட் மில்லர் மீது புகார் தெரிவித்துள்ளனர். புகார் அளித்த பெண் ஒருவர் தமது வாக்குமூலத்தில் தெரிவிக்கையில், சம்பவத்தன்று தம்மை சந்திக்க வரும் படி இன்டர்காண்டினென்டல் ஹொட்டலுக்கு மில்லர் அழைத்ததாகவும்,

அதுவரை ஒருமுறை மட்டுமே பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த தாம், அவருடன் பாதுகாப்பின்றி உறவுக்கு மறுத்ததாகவும், ஆனால் கட்டாயத்தின் பேரில் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் வாழும் பாப் ஆடம்ஸ் என்றே பல பெண்களிடம் ராபர்ட் மில்லர் அறிமுகமாகியுள்ளார். மட்டுமின்றி பெண்கள் மற்றும் இளைஞர்களை சந்திக்க பல ஹொட்டல்களை பயன்படுத்தியுள்ளார்.

உறவுக்கு பின்னர் 1000 முதல் 2,000 டொலர் வரையில் பரிசாகவும் அளித்துள்ளார், ஒருவர் 3,000 டொலர் வரையில் ராபர்ட் மில்லரிடம் இருந்து கைப்பற்றியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்துள்ள மில்லர், வெறும் கட்டுக்கதை என குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply