காசாவில் உடனடி போர் நிறுத்தம் தொடர்பில் ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றம் !

You are currently viewing காசாவில் உடனடி போர் நிறுத்தம் தொடர்பில் ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றம் !

“காசா மீது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் ஐந்து மாதங்களையும் தாண்டி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் காசா முனையில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அடிப்படை உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.இதனால் காசா மீதான தாக்குதல் நிறுத்த வேண்டும். உடனடி போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் இதை வலியுறுத்தியது. ஆனால் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனது.இந்த நிலையில்தான் தற்போது ரம்ஜான் மாதத்தையொட்டி உடனடியாக போர் நிறுத்தம் தேவை என ஐ.நா. சபையில் மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுவரை தன்னுடைய வீட்டோ அதிகாரம் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, இந்த முறை வாக்களிக்காமல் புறக்கணித்தது. இதனால் 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 14 உறுப்பினர்கள் நாடு உடனடி போர் நிறுத்தம் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.

இதனால் காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது நீண்ட போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. மேலும், ஹமாஸ், மற்ற குழுக்கள் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொலை செய்தனர்.

மேலும், 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவிக்கவில்லை என இஸ்ரேல் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்கா இதற்கு எதிராக இருந்து வருகிறது. இதனால் ஐ.நா. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments