காசாவில் நிவாரண பொருட்களுக்காக காத்திருந்த மக்கள் மீது தாக்குதல்!

You are currently viewing காசாவில் நிவாரண பொருட்களுக்காக காத்திருந்த மக்கள் மீது தாக்குதல்!

வடக்கு காசா பகுதியில் நிவாரண பொருட்கள் பெற் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காசா பகுதியில் நிவாரண பொருள்களை வழங்கும் மையத்துக்கு அருகில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் பலியானதாகவும் 155 பேர் காயமுற்றதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இஸ்ரேல் ராணுவம் இதனை தவறான தகவல் என மறுத்திருப்பதோடு இந்த நிகழ்வை மதிப்பிட முழுமையாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சில வாரங்களாக வடக்கு காசாவில் நிவாரண பொருள்கள் வழங்கும் மையமாக திகழும் குவைதி அருகில் வன்முறை வெடித்தது. நிவாரண உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அங்கிருந்தவர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள், அதிகமான பேர் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்ததாக தெரிவித்தனர்.

ஆனால் இஸ்ரேல், உணவுக்காக மக்கள் மோதியதால் அங்கு கலவரம் ஏற்பட்டதாக தெரிவித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து, அமெரிக்கா காசாவுக்கு நிவாரணம் அனுப்பும் புதிய வழிகளை திறப்பது குறித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments