காட்டுத்தீயை அணைக்க படைகள் அழைப்பு: ஆஸ்திரேலியா.

  • Post author:
You are currently viewing காட்டுத்தீயை அணைக்க படைகள் அழைப்பு: ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் தெற்கு ஆஸ்திரேலியா, நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது. விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகிற பகுதிகளில் வசிக்கிற சுமார் 1 லட்சம் பேர், வீடுகளை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை காட்டுத்தீயில் 23 பேர் பலியாகி உள்ள நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த காட்டுத்தீ காரணமாக தென் கிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் வெப்ப நிலை 104 டிகிரியை கடந்துள்ளது.
இதற்கிடையே பிரதமர் ஸ்காட் மோரீசன் நேற்று நிருபர்களிடையே பேசுகையில், “இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவு புதிய நிலைக்கு சென்றுள்ளதை பார்க்க முடிகிறது. நிலைமை மோசமாகி வருவதால், நீங்கள் இப்போது வீடுகளுக்குள் எப்படி பாதுகாப்பாக இருக்க திட்டமிடப்போகிறீர்கள் என்பதுதான் இப்போதுள்ள ஒரே வழி. வீடுகளை விட்டு வெளியேறுவது இப்போதைக்கு ஆபத்தானது” என்று கூறினார்.பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படைகள் அழைக்கப்பட்டுள்ளன.
3 ஆயிரம் படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்தார். ஆஸ்திரேலிய வரலாற்றில் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படை வீரர்கள் அழைக் கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று அந்த நாட்டின் ராணுவ மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள