காணாமல்போன நீர்மூழ்கி! தொடரும் தீவிரமான தேடுதல்!!

You are currently viewing காணாமல்போன நீர்மூழ்கி! தொடரும் தீவிரமான தேடுதல்!!

இந்தோனேஷியாவுக்கு சொந்தமான, காணாமல்போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

“KRI Nanggala 402” என அழைக்கப்படும் மேற்படி நீர்மூழ்கி கப்பலில் 53 பேர் அகப்பட்டிருப்பதாகவும், கப்பலில் சேமிப்பிலுள்ள “ஒக்சிஜன்” உயிர்வாயு 23.04.21 நள்ளிரவு வரையுமே தாக்குப்பிடிக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

1978 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட குறித்த நீர்மூழ்கி, கடந்த புதன்கிழமை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளையிலேயே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, 500 மீட்டர்கள் ஆழம் வரை தாழ்ந்து பயணிக்கக்கூடியதெனவும், இருப்பினும், தற்போது கப்பல் காணாமல் போயுள்ள பகுதி 700 மீட்டர்கள் ஆழமுள்ள பகுதியெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடலில் 50 – 100 மீட்டர்கள் ஆழத்தில் இனந்தெரியாத பொருளொன்று “ராடார்” திரையில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பொருள் காணாமல் போன நீர்மூழ்கியாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்தோனேஷிய கடற்படை தெரிவிக்கிறது.

செய்தி மேம்பாடு:

24.04.2021, 16:53

காணாமல் போன இந்தோனேஷிய நீன்மூழ்கிக்கப்பல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக, இந்தோனேஷிய கடற்படை அறிவித்துள்ளது.

குறித்த நீர்மூழ்கியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரணமாக வெளியே வர முடியாத கப்பலின் பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதால், நீர்மூழ்கி விபத்துக்குள்ளாகியிருக்கலாமென தெரிவிக்கும் இந்தோனேஷிய கடற்படை, அதில் இருந்த 53 பேரில் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்றும் தெரிவித்துள்ளது.

கடலின் அடியில் 850 மீட்டர்கள் ஆழத்தில் நீர்மூழ்கியின் சிதைவுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, குறித்த நீர்மூழ்கி, 500 மீட்டர்கள் ஆழத்தை மட்டுமே தாங்கும் சக்தி கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments