காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்!

You are currently viewing காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்!

வவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி கைது செய்யப்பட்டதை தாம் கண்டிப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குடும்பங்களின் தலைவி கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்க விரும்புகிறேன்.

நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள ஒரு பிரதிநிதியை அனுப்புமாறு வெளியுறவு செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வேண்டும்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சியோபைன் மெக்டொனாக் நேற்றைய தினம் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிற் கேமரூனுக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெனிற்றாவின் கைது தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் எனவும் அமைதியாக போராட்டம் மேற்கொண்ட போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் வடக்குக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதியை சந்தித்து தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் வினவ முற்பட்ட போதே ஜெனிட்டா கைது செய்யப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments