கிரீஸ் (Greece) நாட்டில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை CGTN Twitterல் பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் இத்தாலிக்கு சென்று வந்த 30 வயது நிரம்பிய கிரேக்க பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். இவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
13 ஐரோப்பிய நாடுகளில் இப்போது கோவிட் -19 வைரஸ் நோய் தொற்று உறுதிப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.