பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு ; வைரஸ் பாதிப்பு!

  • Post author:
You are currently viewing பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரிப்பு ; வைரஸ் பாதிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. எனினும் பலி எண்ணிக்கை அச்சப்படும் அளவிலேயே காணப்படுகிறது.

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 52 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் சீனாவில் பலி எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளது. 78,064 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  புதிதாக 406 – பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. 

பகிர்ந்துகொள்ள