குருந்தூர் மலையினை பாதுகாக்க சிவில்பாதுகாப்பு முகாம்!

You are currently viewing குருந்தூர் மலையினை பாதுகாக்க சிவில்பாதுகாப்பு முகாம்!


தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க குருந்தூர் மலையில் ஜயனார் ஆலயம் ஒன்று தொன்று தொட்டு வழிபட்டுவந்துள்ளது போரின் பின்னர் பல்வேறு சர்ச்சையினை ஏற்படுத்தி இன்றும் நீதிமன்ற உத்தரவுடன் காணப்படும் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதியாகும்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு வீதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலைஒன்றினை நிறுவும் நோக்கில் புத்தர் சிலை உள்ளிட்ட பொருட்களுடன் கடந்த 04.09.18 பௌத்த துறவி உள்ளிட்டவர்கள் சென்று சர்ச்சையினை ஏற்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் மீண்டும் இனங்களுக்கிடையயில் முறுகல் நிலையினை ஏற்படுத்தும் விதமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


கடந்த 13.09.18 அன்று நீதிமன்றத்தினால் குருந்தூர் மலைக்கு மக்கள் சென்று வரலாம் என்றும் அங்கு எந்த வித மாற்றங்களும் செய்யமுடியாது என இடைக்கால உத்தரவினை முல்லைத்;தீpவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


தற்போது குருந்தூர் மலைப்பகுதியில் முகாம் ஒன்றினை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் தகவல்தெரிவித்துள்ளதை தொடர்ந்து சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் விடையத்தினை நீதிமன்றுக்கு கொண்டு சென்றுள்ளார்.
இது விடையம் குறித்து 10.09.2020 அன்று நீதவானால் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரிகளை அழைத்துள்ளார்.


தொல்பொருள் திணைக்களத்தின் ஆழுகையின் கீழ்உள்ள பகுதி என்றகாரணத்தினால் அங்கு பாதுகாப்பு போடவேண்டிய தேவை உள்ளதால்தொல் பொருள் திணைக்களம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் அனுமதிகோரி பிரதேச செயலாளரால் அடையாளம் காணப்பட்ட இடத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் முகாம் அமைக்கும்பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.


பாதுகாப்பிற்காக முகாம் அமைக்கமாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேல் எந்த மாற்றமும் செய்யமுடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள