சிங்கள பேரினவாத அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக” எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக 07.07.2023 இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தினை முல்லைத்த்தீவுமாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து முன்னெடுக்கப்பட்டது
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சரணடைந்த போராளிகள் ,பொதுமக்கள் எங்கே என்று உரத்த குரலில் போராட்டக்காரர்களால் குரலெழுப்பபட்டது
மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து சிங்கள பேரினவாத அரசினால் வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள். இவர்களை கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் தமிழர் தாயக மாவட்டங்களில் போராட்டங்கள் நடாத்திவருகின்றார்கள் இந்நிலையில் குறித்த புதைகுழியில் காணாமலாக்கபட்ட உறவுகள் அல்லது போராளிகளை சித்திரவதை செய்து புதைத்திருக்கலாம் என்கின்ற ஐயப்பாடு போராட்டகாரர்களினால் வைக்கப்பட்டுள்ளது