கொடிகாமத்தில் வானுடன் மோதிக் கவிழ்ந்த மினி பஸ்! – 11 பேர் காயம்.

You are currently viewing கொடிகாமத்தில் வானுடன் மோதிக் கவிழ்ந்த மினி பஸ்! – 11 பேர் காயம்.

யாழ்ப்பாணம்- கண்டி (ஏ-9) வீதியில் கொடிகாமத்தில் தனியார் பஸ்ஸொன்றும் வானும் மோதி புரண்டதில், 11 பேர் காயமடைந்து, சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் வரையில் பயணித்த தனியார் பஸ், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் முன்பாக வந்துகொண்டிருந்த வானில் மோதியுள்ளது. விபத்தில் சிக்கி பஸ், வீதியோரத்தில் புரண்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் இருவர் என்று தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர்கள் ​பாரிய ஆபத்து எதுவுமில்லை என்றனர்.

இதேவேளை

முல்லைத்தீவு – மல்லாவி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மல்லாவி சிறீலங்கா காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments