மட்டக்களப்பில் ஏற்பட்ட கோரோனா பீதி! இராணுவம் குவிப்பு! வைத்தியசாலையை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 6 பேர் கைது? அச்சத்தில் மக்கள்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.
இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு வந்த நிலையில் அங்கு காய்ச்சலுக்குட்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைபெறச்சென்றுள்ளார்.
கொழும்பில் உள்ள ஹோட்டலில் இவர் சீனர்களுடன் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இவரின் நோய் தொடர்பில் வைத்தியர்கள் சந்தேகம் கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நபராகவும் இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியுலன்ஸை மறித்து வைத்தியசாலையினை சூழவுள்ள பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக காவல்த்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தற்போதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை சூழ விசேட அதிரடிப்படையினரும் காவல்த்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல்: மட்டக்களப்பு ஊடகவியலாளர்