15.04.2020 புதன்கிழமை, குழந்தைகள் மருத்துவர் சங்கம் ஒரு மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது, அங்கு அவர்கள் தேசிய பொது சுகாதார நிறுவனத்துடன் இணைந்து, ஒழுங்கமைக்கப்பட்ட வீட்டிலிருந்து கற்றலானது, குழுக்களாக குழந்தைகள் கல்விக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று தீர்மானித்துள்ளனர்.
ஏப்ரல் 20 திங்கள், மற்றும் 27 திங்கள் முதல் மழலையர் பள்ளி மற்றும் சிறுவர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், தொற்றுத் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை புதன்கிழமை பிற்பகல் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
அவற்றிலிருந்து சில பரிந்துரைகள் :-
தீவிர புற்றுநோய் சிகிச்சையில் உள்ள மழலையர் பள்ளி குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று குழந்தைகள் மருத்துவர் சங்கம் பரிந்துரைக்கிறது.
இல்லையெனில்.., எந்த குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து கற்றல் பொருத்தமானதாக இருக்கும் என்ற ஒரு பட்டியலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அவை கீழ்வருமாறு:-
1. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ transplantation) செய்யப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
2. கடந்த 12 மாதங்களில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிட்சை (Benmargs transplantasjon) செய்யப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- CAR-T பெற்ற குழந்தைகளும் உள்ளடங்கும்,
- குருத்தணு (Stem Cell) நன்கொடையாளராக இருக்கும் உடன்பிறப்புகள் (நன்கொடைக்கு முன் இறுதி 28 நாட்களில்)
3. தீவிர புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்:
- மழலையர் பள்ளி குழந்தைகள்: பள்ளிக்கு செல்ல பரிந்துரைக்கப்படவில்லை.
- சிறார்கள் பள்ளி குழந்தைகள்: வேதியியல் மருத்துவம் (Chemotherapy – cellegift ) பெறும் ஒவ்வொருவரும், குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
- லுகேமியா (Leukemi) பராமரிப்பு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள்.
4. கடுமையான இதய நோய் உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்:
- நுரையீரல், உயர் இரத்த அழுத்தத்திற்கு (Pulmonal hypertensjon) சிகிச்சையளிக்கப்படுகின்ற குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- இதய செயலிழப்புக்கு (hjertesvikt) சிகிச்சையளிக்கப்படுகின்ற குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- ஃபோண்டன் சுழற்சி (Fontan circulation) கொண்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- கடுமையான இதய குறைபாடுகள் (Hjertefeil) உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
5. கடுமையான நுரையீரல் நோய் மற்றும் / அல்லது நுரையீரல் திறன் கணிசமாகக் குறைத்துள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்:
- இடையிடையே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- கடுமையான ஆஸ்துமா (Astma) நோயுள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், முறையான ஊக்க மருந்துகள் அல்லது 3 க்கும் மேற்பட்ட முறை மருத்துவமணியில் சிகிச்சையளிக்கப்ப டடவர்கள்.
- சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (Cystic fibrosis) கொண்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- மூச்சுப் பெருங்குழாய்த் தொற்று (Trakeostomi) கொண்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- நரம்புத்தசை நோய் (Nevromuskulær sykdom)மற்றும் சுவாச உதவி தேவைப்படும் (respirasjonsstøtte) குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- முன்னர் கடுமையான நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
6. கடுமையான, பிறப்பில் நோயெதிர்ப்பு குறைபாட்டு கோளாறுகள் கண்டறியப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்,
- குறிப்பாக, கடுமையான சுவாசக்குழாய் தொற்றுநோய்களுக்கு ஆளாகக்கூடிய, சீரற்ற, கட்டத்தில் இருப்பவர்கள்.
7. நோயெதிர்ப்பு தடுப்பு மருந்து பாவிப்பவர்கள் மற்றும் நீடித்த நோய் (kronisk sykdom) உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்
- குணமடையாத நெஃப்ரோடிக் (nephrotic) நோய்க்குறி உள்ள குழந்தைகளும் இதில் அடங்குவர்.
8. இங்கு குறிப்பிடப்படாத வேறு தீவிரநோய் அறிகுறிகளுடன் கூடிய குழந்தைகளுக்கும் இது பொருந்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், எளிதான கல்வியின் அவசியத்தை மருத்துவருடன் ஆலோசித்து தெளிவுபடுத்த வேண்டும்.
- உதாரணமாக, இரத்த உயிரணு சோகை (Sigdcelleanemi) உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு இது பொருந்தும்.
- பிற அரிய நோய்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல், நீடித்த நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் வழக்கம்போல மழலையர் பள்ளி மற்றும் சிறுவர் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகளின் பட்டியலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர் :
இவர்கள் பள்ளிக்கு செல்லலாம்:-
- நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆஸ்துமா (Astma) நோயை கொண்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- ஒவ்வாமை (Allergi) கொண்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- கால்-கை வலிப்பு (Epilepsi) உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- மனநலிவு நோய் (Downs syndrom) அறிகுறி உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- இதய செயலிழப்பு (Hjertesvikt) இல்லாமல் இதய குறைபாடு (Hjertefeil) உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- நோய்க்கான சுய நோய் எதிர்ப்பு சக்தி உள்ள மற்றும், நோய் எதிர்ப்பு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
- முன்கூட்டியே நுரையீரல் நோய் உள்ள, ஆனால், குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பு இல்லாத குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர்.
மேலதிக தகவல் : Dagbladet