இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
“ இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத மாநிலமாக கோவா மாறியுள்ளது. ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
புதுச்சேரி மஹே, கர்நாடாகாவின் குடகு, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய இடங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை. இந்தியாவில் 59 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்றார்.