“கொரோனா” கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டது நோர்வே!

You are currently viewing “கொரோனா” கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டது நோர்வே!

உலகெங்கும் “கொரோனா” பெருந்தொற்று பரவியதையடுத்து, கடந்த ஒன்றரை வருடங்களாக முழுமையாகவோ / பகுதியாகவோ முடக்கப்பட்டிருந்த நோர்வே, இன்று, 25.09.2021 இலிருந்து முற்றாக வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.

இதுவரை காலமும் விதிக்கப்பட்டிருந்த “கொரோனா” கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தும் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படுவதாக நேற்றைய தினம் அரசு அறிவிப்பு வெளியாகியிருந்தது. பிரதமர் “Erna Solberg” அம்மையார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் “Høie” உள்ளிட்டோர் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்விடயம் உத்தியோகபூர்வமாக நட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

நாடு வழமைக்கு திரும்பியதையடுத்து மக்கள் மகிழ்வடைந்துள்ளதை, அவர்களின் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நாடு முழுவதும் பொலிவிழந்து கிடந்த உணவகங்கள், உல்லாசவிடுதிகள், இரவுநேர கேளிக்கை விடுதிகள், மதுபானச்சாலைகள் போன்றவற்றில் வழமைபோலவே மக்கள் கூடத்தொடங்கியுள்ளனர். மட்டுப்படுத்தப்பட்டிருந்த விளையாட்டு நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள், கலை நிகழ்ச்சிகள் என அனைத்தும் மீண்டும் நடைபெற ஆரம்பித்துள்ளன.

எதிர்வரும் 04.10.2021 இலிருந்து ஒருவாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை நெருங்கிவரும் நிலையில், வெளிநாடுகளுக்கு போவதற்காக விமானசேவை நிறுவனங்களில் பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதிலும், உள்ளூரிலேயே மலைவாசத்தலங்களுக்கு முன்பதிவு செய்வதிலும் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments