கொரோனா சந்தேகங்கள் : குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வுஹான் வைரஸ் ஆய்வகம்!

  • Post author:
You are currently viewing கொரோனா சந்தேகங்கள் : குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வுஹான் வைரஸ் ஆய்வகம்!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய சீன நகரமான வுஹானில் உள்ள ஆய்வகத்தின் தலைவர், கொரோனா வைரஸ் தங்கள் ஆய்வகத்திலிருந்துதான் பரவியது என்ற கூற்றை நிராகரித்துள்ளார்.

சீனாவில், ஆரம்பத்தில் இருந்தே நாட்டில் தொற்றுநோயை எவ்வாறு கையாண்டார்கள் என்பது குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டுமென்று அதிகரித்து வரும் அழுத்தங்களை, சீனா அதிகாரிகள் சமீபகாலமாக எதிர்கொண்டு வருகின்றனர். வதந்திகள் பரவியுள்ளன, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான, உயர் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இந்த வைரஸ் ஆய்வகத்தில் இருந்து வைரஸ் உண்மையில் வெளிவந்ததா என்று அமெரிக்கா இப்போது விசாரித்து வருகின்றது.

சீன ஆராய்ச்சியாளர்கள், வைரஸ் வெளவால்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் அது, மற்ற விலங்குகளுக்கு தாவி வூஹானில் உள்ள சந்தைகள் ஊடாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றி இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

மேலும், வுஹானில் வைரஸ் ஆய்வகம் உள்ளது உண்மையே. இருப்பினும், ஆய்வகத்திலிருந்துதான் வைரஸ்கள் உருவாகின என்ற தவறான கோட்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் அடிப்படையற்றவை என்றும்,

உண்மையில் வுஹானின் வைரஸ் ஆய்வகம், குறிப்பாக P4 – ஆய்வகம் ஆபத்தான வைரஸ்களைக் கையாள்வதற்கு வசதியான தாகவே உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

சனிக்கிழமையன்று ஆங்கில மொழி மாநில ஒளிபரப்பாளரான CGTN-க்கு அளித்த பேட்டியில், ஆய்வகத்தின் தலைவர் “Yuan Zhiming“, அவர்களிடமிருந்து வைரஸ் வந்தது என்பது சாத்தியமற்ற கூற்று என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா விசாரிக்கும்:
Trump மற்றும் அவரது வெளியுறவு செயலாளர் Mike Pompeo இருவரும் தொற்று தொடங்கியபோது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

பிருத்தானிய வெளியுறவு அமைச்சர் “Dominic Raab” வியாழக்கிழமை G7- நாடுகளுக்கான காணொளி கூட்டத்திற்குப் பின்னர் தொற்றுநோய்க்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

மேலதிக தகவல் : Dagbladet

பகிர்ந்துகொள்ள