கொரோனா சிங்கப்பூர் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொரோனா!

  • Post author:
You are currently viewing கொரோனா சிங்கப்பூர் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொரோனா!

சிங்கப்பூரில் இந்தியர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுத்தொழிலாளர்களுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பதிவான கொரோனா பாதிப்பில், 15 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவர். இந்தத் தகவலை சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்தியர்களே. கொரோனா பாதிப்பால், சிங்கப்பூரில் உள்நாட்டு மக்களை விட வெளிநாட்டு தொழிலாளர்களே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவத்தொடங்கியதும், பரவலான சோதனை, கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் சிங்கப்பூர் அரசு முதற்கட்டமாக கட்டுக்குள் கொண்டு வந்தது. எனினும், தற்போது இரண்டவாது அலையாக சிங்கப்பூரில் கொரோனா தொற்று வேகமாகப் பரவத்தொடங்கியது. இதன் காரணமாக சிங்கப்பூரில் ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு மாதிரியான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் ஒட்டு மொத்தமாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10,141 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள