கொரோனா தமிழ்நாடு : நான்கு வண்ணங்களாக பிரிக்கப்பட்டது சென்னை!

  • Post author:
You are currently viewing கொரோனா தமிழ்நாடு : நான்கு வண்ணங்களாக பிரிக்கப்பட்டது சென்னை!

சென்னையில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டது ஆண்களா, பெண்களா என்ற விபரங்களையும், குறிப்பாக எந்த வயதினருக்கு எவ்வளவு பாதிப்பு உள்ளது என்ற தகவலையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் 214 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் குணமடைந்து உள்ளனர்.

பாதிப்புகளின் அடிப்படையில் சென்னையில் உள்ள மண்டலங்கள் சிவப்பு, ஆரஞ்சு, இளம் ஆரஞ்சு, பச்சை ஆகிய நான்கு வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 64 பேர் பாதிப்படைந்துள்ள ராயபுரம் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு ள்ளது. தொடர்ந்து 31 பேர் பாதிப்படைந்துள்ள திருவிக நகர், 24 பேர் பாதிப்படைந்துள்ள கோடம்பாக்கம், 22 பேர் பாதிப்படைந்துள்ள அண்ணாநகர், 20 பேர் பாதிப்படைந்துள்ள தண்டையார்ப்பேட்டை, 18 பேர் பாதிப்படைந்துள்ள தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்கள் ஆரஞ்சு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

7 பேர் பாதிப்படைந்துள்ள பெருங்குடி மற்றும் அடையாறு, 5 பேர் பாதிப்படைந்துள்ள வளசரவாக்கம், 4 பேர் பாதிப்படைந்துள்ள திருவொற்றியூர், 3 பேர் பாதிப்படைந்துள்ள மாதவரம் மற்றும் ஆலந்தூர், 2 பேர் பாதிப்படைந்துள்ள சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகள் இளம் ஆரஞ்சு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இது வரை பாதிப்பு உறுதி செய்யப்படாத மணலி மற்றும் அம்பத்தூர் ஆகிய மண்டலங்கள் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தமிழ்நாடு : நான்கு வண்ணங்களாக பிரிக்கப்பட்டது சென்னை! 1

உயிரிழந்தவர்கள் ராயபுரத்தில் 5 பேரும், திருவிக நகரில் 1 நபரும், தண்டையார்பேட்டையில் 1 நபரும் உள்ளனர். குணம் அடைந்தவர்கள் ராயபுரத்தில் 1 நபரும், கோடம்பாக்கத்தில் 5 நபரும், அண்ணாநகரில் 7 பேரும், தேனாம்பேட்டையில் 3 நபரும், வளசரவாக்கத்தில் 2 நபரும், அடையாறில் 1 நபரும், ஆலந்தூரில் 1 நபரும் உள்ளனர்.

சென்னையில் ஆண்கள் 69.05% பேரும், பெண்கள் 30.95% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 44 பேருக்கு தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 1 நபரும், 80 வயதுக்கு மேலும் 2 நபரும் பாதிப்படைந்துள்ளனர்.

10 முதல் 19 வயதுள்ளோர் 14 பேருக்கும், 20 முதல் 29 வயதுள்ளோர் 32 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 40 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 40 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 21 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 14 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள