கோர நினைவுகள்!

You are currently viewing கோர நினைவுகள்!

முள்ளிவாய்க்காலில் வெடிகுண்டுகளால்

அள்ளிக்கொட்டி இரத்த வெள்ளத்தில் இழுத்துப்போட்டனர் ஈழக்கரையெங்கும்!

பல்லாயிரம் உயிர்கள் ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்த கந்தகப்பூமியில்
தீப்பிளம்பாய் வீழும் எறிகணையில் இருந்து தன்னை காக்க இறுதி மூச்சை இறுகப்பிடித்து அங்கும் இங்குமாய் அலறி ஓடினர் எம் மக்கள்!


உறவுகள்சாகவும் உணர்வுகள்சாகவும் எம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடைப்பிணமாய் ஓடவைத்த ஓர் இரத்த பூமியில் சிங்கள காடையரின் ஏக்காளமே எகிறி வந்தது!

புத்தனும் காந்தியும் ஓதியவேதம் இரத்தமும் சதையுமாய் பூமியில் மிதந்தது! நித்தமும் உயிர்பலி வீழ்கிற பூமியில் மொத்தமாய் கொன்று நீ தாண்டவமாடினாய்!

கரும்புகைகள் எழுந்து வானைமுட்ட ஏவும் செல்கள் எரிந்து வீழ தப்பியோட இடமே இன்றி தமிழன் தவித்துநின்ற தமிழின அழிப்பு நாளில்
கஞ்சிக்கு கூட வழியின்றி விழி பிதுங்கி நின்ற கொடிய நினைவுகள் நெடும் துயராய் வாட்டுது!


ஏதும்அறிய அப்பாவிகள் மீது பயங்கரவாத பழியை சுமத்தி கொத்து கொத்தாய் கொண்டு குவித்த ஓர்நாள் இன்று!

எம்இனம் எரியும் நெருப்பில் புழுவாய் துடித்து கருகிப்போன கரிநாள் இன்று!

முள்ளிவாய்கால் முற்றம் எல்லாம் இரத்தமும் சதையுமாய் சிதறிக்கிடந்த உறவுகளுக்கு கண்ணீர்சிந்த நேரமின்றி கலங்கிநின்ற கனத்த நாள்!

மரத்துப்போன மனதுகளோடு மானம்காக்க மண்டியிட்ட மாறாத விடுங்கள் சுமந்த நாள்!


வெள்ளைக்கொடியிலும் இரத்தம்பூசி எம்மை வேட்டையாடின வெறிநாய்க்கூட்டம் .

கதறக் கதற பிஞ்சுகள்மீது உன் இச்சை தீர்த்தாய் தாயும் பிள்ளையும் கெஞ்ச கெஞ்ச கருனையின்றி உன் உடல் பசியை தீர்த்தாய்!

பட்டமரத்துக்கும் துயிலை உரிந்து வெட்டவெளியில் நிற்கவைத்தாய் மொட்டுப்பூவையும் கசக்கியெறிந்தாய் இறந்தவர் உடலிலும் இன்பத்தைதேடிடும் ஓர் ஈனப்பிறவியுமானாய்!

அடுக்கடுக்காய் வீழ்ந்த எரிகுண்டுகளால் எரிமலை பிளம்புகளாய் வெடித்து எரிந்தது எம்முள்ளிதேசம்!.

பசியால் மயங்கி கொஞ்சம் சாக நச்சுக்காற்றில் மூச்சுதிணறி கொஞ்சம் போக !

கை கால் இழந்து இரத்தம் உறைந்து கொஞ்சம்சாக

எரியும் நெருப்பில் கருகி கொஞ்சம் கரியாய்சாக பதுங்கு குளியில் கண்கள் பிதுங்கி கொஞ்சம் சாக!


வயித்தியரோ தாதியரோ வயித்தியம் சார் ஊளியரோ அனைவரையும் உன் உச்ச வெறியில் கொன்றே குவித்தாய்!

நயவஞ்சகத்தால் எம்வீரத்தை வீழ்நினாய் சமாதானம் என்னும் நாடகமாடி நீ எம்பலத்தினை சிதைத்தாய் .

பசியால் கதறும் பச்சிடம் குழந்தை இறந்த தாயின் மார்பில் பசியையாற்ற முயற்சிசெய்யும் காட்சியொன்று என் நெஞ்சை பிளந்து போனது ஏனோ

பெட்டி படுக்கை கூட எடுக்காமல் ஒட்டுத்துணியோடை ஒடிவந்த எங்களைத்தான் முட்கம்பி வேலிக்குள் மூன்றுநாளாய் அடைத்துவைந்து பட்டினியால் சாகவிட்டாய்!


எம்மோடு கூடவந்த சிலபேரை மண்ணுக்குள் புதைத்து வைத்து விட்டு காணமல் போனோரின் பட்டியலில் இணைத்து வைத்து அப்படி யாரும் இல்லையென மனிதம் தொலைத்த மனிதரின் முகத்திரைதான் கிளியாதோ ?
சீனாவின் சிந்தனையில் புதைந்த எலும்புகளின் எச்சங்களைகூட மிச்சமின்றி நீ அழித்தாய்!

அயல்நாட்டு அரசுகளின் சேலைக்குள் ஒழிந்துருந்து ஆயிரம் ஆயிரமாய் நீ கொண்டு குவிக்கையிலை நாம் வணங்கும் ஆண்டவனும் கேட்கவில்லை!

அயல்நாடுகளும் கேட்கவில்லை!

சிங்கள அரசு வென்று விட்டோம் என்று வெடிமுழக்கம் வைக்கையிலே வாழ்த்துமடல் அனுப்பிவைக்க முன் வருசையிலை நிண்டீரே!

ஓரவஞ்சக உலகமே இப்போது அறிகிறாய் கொரோனாவின் வலியை

உணர்வாயா?

✍விஷ்னு- பிருத்தானியா

பகிர்ந்துகொள்ள