வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் இனி சோதனை செய்யப்பட மாட்டார்கள், மேலும் அவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு அவசியமாக தேவைப்படாவிட்டால் சுகாதாரப் பாதுகாப்பு சேவையை தொடர்பு கொள்ளக்கூடாது என்று FHI தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பதை அனைவரும் உறுதிப்படுத்த விரும்புகின்றார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கின்றோம். இருப்பினும், சமுதாயத்தில் இந்த நோயால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பவர்களுக்கும் பாதுகாப்பு முன்னுரிமைகள் செய்யப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்று பொது சுகாதார நிறுவனத்தின் துறை இயக்குனர் Line Vold அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இப்போது FHI சுட்டிக்காட்டும் முக்கியமான விடயம் என்னவென்றால், நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உள்ள அனைவரும் மற்றவர்களுக்கு அந்த நோய் தொற்றுவதை தவிர்ப்பதற்காக வீட்டிலேயே இருப்பதே என்பதாகும்!
ஆதாரம்/ மேலதிக தகவல்: FHI