சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நபர் கைது!

You are currently viewing சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நபர் கைது!

பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தைச் சேர்ந்த பயாஸ் முகமது என்ற நபர் கடந்த 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்காக சென்றுள்ளார். அங்கு இந்தியாவைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவருடன் பயாஸ் முகமதுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பயாஸ் முகமதின் மனைவி இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து பயாஸ் முகமது தனது மனைவி மற்றும் மகனை சந்திப்பதற்காக இந்தியா வர முடிவு செய்துள்ளார். அவரது மனைவி ஐதராபாத்தில் உள்ள கிசான் பாக் பகுதியில் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் உறவினர்கள் பயாஸ் முகமதிற்கு போலியான ஆவணங்களை தயாரித்து அவரை இந்தியாவிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதன்படி பயாஸ் முகமது நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.

தொடர்ந்து ஐதராபாத் சென்ற அவர், அங்கு தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பயாஸ் முகமதை கைது செய்து அவரிடம் இருந்த போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவருக்கு போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய நபர்கள் தலைமறைவான நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments