சட்டவிரோதமாக ருமேனியா செல்ல முயற்சி: கட்டுநாயக்காவில் யாழ். மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த நால்வர் கைது!

You are currently viewing சட்டவிரோதமாக ருமேனியா செல்ல முயற்சி: கட்டுநாயக்காவில் யாழ். மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த நால்வர் கைது!

போலி ஆவணங்கள் மூலம் ருமேனியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி விசா மற்றும் கடற்படை அடையாள அட்டையை பயன்படுத்தி சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக கூறி ருமேனியா நோக்கி பயணிக்க முயற்சித்த 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த 21 முதல் 41 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்திற்கு பிரவேசித்த குறித்த நபர்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்ததையடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர்.

அவர்களில் இரண்டு பேரிடம் இருந்து ருமேனியா விசா அனுமதி பத்திரம் உள்ளமை கண்டறியப்பட்டது.

அத்துடன் கடற்படையின் அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்து இவ்வாறு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தமையும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நால்வரிடமும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply