சந்திரிக்காவின் தமிழின அழிப்பின் சாட்சியங்களே மனிதப்படுகுழி!

You are currently viewing சந்திரிக்காவின் தமிழின அழிப்பின் சாட்சியங்களே மனிதப்படுகுழி!

*சிறிலங்காவின் பெளத்த பேரினவாத சிங்கள ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் தமிழின அழிப்பு* செம்மணி மனிதப் புதைகுழி

இன்றுவரை (09/07/2025) செம்மணியில் 52 படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.

1994, நவம்பர்,12 தொடக்கம் 2005, நவம்பர்,19 வரை 11 வருடங்களாக ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர் சமாதானப்புறா என அழைக்கப்பட்ட சந்திரிகா குமாரணதுங்க அவர் காலத்தில் இடம்பெற்ற இன அழிப்பு விபரம்:

1. 1995,யூலை,09, நவாலி தேவாலய படுகொலை-131, தமிழர்கள்.
2. 1995, செப்டம்பர்,22,நாகர்கோயில் பாடாசாலை படுகொலை-137, தமிழர்கள்.
3. 1996, செம்மணிப்படுகொலை-140, தமிழர்கள்.
4. 1996,பெப்ரவரி,11, குமரபுரம் படுகொலை -143, தமிழர்கள்.
5. 1996, மார்ச்,16,நாச்சிக்குடா படுகொலை -146, தமிழர்கள்.
6. 1996, மே,17,யாழ் தம்பிராஜ் சந்தை குண்டுவீச்சு-148, தமிழர்கள்.
7. 1996,யூலை,24-மல்லாவி படுகொலை -150, தமிழர்கள்.
8. 1996, செப்டம்பர்,07, கைதடி கிரிசாந்தி உட்பட தமிழினப்படுகொலை படுகொலை-151, தமிழர்கள்.
9. 1996, செப்டம்பர்,1997, ஆகஷ்ட்,15, இரண்டு தினங்கள் வவுனிக்குளம் படுகொலை -160, தமிழர்கள்.1998
10. 1996, செப்டம்பர்,27, கோணாவில் குண்டு வீச்சு படுகொலை-153, தமிழர்கள்.
11. 1997, மே,13, முள்ளிவாய்க்கால் படுகொலை-155, தமிழர்கள்.
12. 1997, யூண்,08, மாங்குலம் செல்வீச்சு படுகொலை-156, தமிழர்கள்.
13. 1997, யூலை,05, பன்னங்கட்டி படுகொலை-158, தமிழர்கள்.
14. 1997,யூலை,15, அக்கராயன் அரசினர் வைத்தியசாலை படுகொலை-159, தமிழர்கள்.
15. 1998,பெப்ரவரி,01, தம்பலகாமம் படுகொலை-162, தமிழர்.
16. 1998, மார்ச்,26,பழைய வட்டக்கச்சி படுகொலை -163, தமிழர்கள்.
17. 1998, யூண்,10, சுதந்திரபுரம் படுகொலை -165, தமிழர்கள்.
18. 1998, கிளிநொச்சி நகர் படுகொலை-142, தமிழர்கள்.
19. 1998, நவம்பர்,25,விசுமடு படுகொலை -167, தமிழர்கள்.
20. 1998, டிசம்பர்,02, சுண்டிக்குளம் படுகொலை-169, தமிழர்கள்.
21. 1999, செப்ரம்பர்,15,மந்துவில் படுகொலை-169, தமிழர்கள்.
22. 1999,நவம்பர்,03, பாலிநகர் படுகொலை -172, தமிழர்கள்.
23. 1999, நவம்பர்,20, மன்னார் மடுதேவாலயம் படுகொலை- 173, தமிழர்கள்.
24. 2000, அக்கோடபர்,25, பிந்துனு வெவ படுகொலை- 177, தமிழர்கள்.
25. 2000, டிசம்பர்,11, மிருசிவில் படுகொலை -180, தமிழர்கள்.

சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி 11, வருடங்கள் அதில் முக்கியமான 25, இன அழிப்புப் படுகொலைகள் அவரின் ஆட்சியிலேயே இடம்பெற்றது.

சந்திரிகாவின் ஆட்சிக்கு முன்பிருந்த ஐனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர். பிரமதாச, டி பி.விஜயதுங்க,
சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து கைமாறிய மகிந்தராஜபக்ச, காலத்து இனப்படுகொலைகள் பற்றிய விபரம் இன்னும் ஒரு பதிவில் தருகிறோம்.

தற்போது பேசும் பொருளாக மாறியுள்ள யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி, சித்துப்பாத்தியில் தோண்டப்படும் புதைகுழிகளில் இருந்து இதுவரை சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என 52, க்கு மேற்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவைகள் அனைத்தும் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நடந்தவை என கூறப்படுவதால் அவருடைய ஆட்சிக்கால படுகொலைகள் மட்டும் அறிவதற்கான பதிவே இதுவாகும்…
*துன்பத்தைத் தந்தவனிற்கே திருப்பிக்கொடு* சந்திரிகா குமாரதுங்க அம்மையார் கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கையின்போது அவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது இதிலிருந்து அவர் மயிரிழையில் உயிர்தப்பினார். இது 1999 டிசம்பர் 18ம் திகதிய செய்தி… ஒரு விடயத்திற்கு எவ்வாறு நீதி வழங்க வேண்டும் என்பது எதிரிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பது முதுமொழியாகும். அனைத்துலக மனிதவுரிமைப் பொறிமுறை நீதி வழங்குமா? அல்லது அவர்களின் பூகோள, பொருண்மிய நலன்களிற்குள் தமிழர்களிற்கான நீதி மீண்டும் செம்மணியிலே புதைக்கப்படுமா?

*அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி*

பகிர்ந்துகொள்ள

Leave a Reply