ஓமந்தையில் காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்!

You are currently viewing ஓமந்தையில் காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்!

வவுனியா, ஓமந்தை சிறீலங்கா காவற்துறை நிலையத்துக்கு அருகாமையில் உள்ள அரச காணிக்குள் ஓமந்தை காவற்துறையினர்  அத்துமீறிச் சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி நேற்று(08) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் அந்தப் பகுதியில் கூடியவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஓமந்தையின் ஏ – 9 வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் தனியார் உரிமை கோரி வரும் அரச காணி ஒன்றை காவற்துறையினர் துப்புரவு செய்து அதைச் சுற்றி வேலி அமைக்க முற்பட்ட வேளை, அங்கு கூடிய அரசியல்வாதிகள், பொதுமக்களால் நிறுத்தப்பட்டதோடு விகாரை அமைக்கும் முயற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காணி தொடர்பில் கடந்த பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதைப்  காவற்துறையினர் அபகரிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply