சமஸ்டி தீர்வுக்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும்!

You are currently viewing சமஸ்டி தீர்வுக்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும்!

வரலாற்றில் என்றும் இல்லாதவாறு இலங்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் 74 வருட அனுபவத்தைக் கொண்டு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான எநத முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், போரின் பின்னர் 13 வருடக்காலத்தில் கூட வடக்குகிழக்கு கடல் ரீதியான பொருளாதாரம் அனைத்து அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டுள்ளது.

19வது திருத்தம் மீண்டும் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறப்படுகின்ற நிலையில் அது நடைமுறையில் இருந்தபோதும் பல கோடி ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டதாக கஜேந்திரன் குறிப்பிட்டார்.

இனவாதத்தை இந்த நாடு என்று கைவிடுகிறதோ அன்றே நாட்டுக்கு விடிவுக்கிடைக்கும் என்றும் கஜேந்திரன் தெரிவித்தார்.

எதிர்கட்சியின் சார்பில் உரையாற்றியவர்கள் சர்வதேச நன்கொடையாளர்களின் மாநாட்டை நடத்த கோரியபோதும், புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியை பெற்றுக்கொள்வதில் பின்னிற்கிறார்கள் என்று கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை இன்று இலங்கைக்கு நிவாரணத்தை வழங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இலங்கையில் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி தீர்வு ஏற்பட உதவியளிக்கவேண்டும் என்றும் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments