
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவில் புனித இராயப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி முல்லைத்தீவு நகரை நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

