வடமராட்சியில் சிகரம் தொட்ட பெண்!

You are currently viewing வடமராட்சியில் சிகரம் தொட்ட பெண்!

இலங்கையின் வடக்கு, வடமாராட்சியில் இருந்து சிகரம் தொட்ட தமிழ் பெண் பவானி ஆழ்வாப்பிள்ளை மூத்த அழக்கலை போதனாசிரியர் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

பவானி ஆழ்வாப்பிள்ளை மூத்த அழகுக்கலை,தையற்கலை கைவினைப் பொருட்கள், சமையற்கலை போதனாசிரியர் முன்னாள் அழகுக்கலை நிபுணரும் ஆவார்.

அத்துடன் இத்துறை சார்ந்த மூன்று சர்வதேச தரம் வாய்ந்த நூல்களை வெளியிட்டுள்ள இவர் இன்றைய பல, முன்னணி அழகுக்கலை நிபுணர்களின் ஆரம்ப கால குருவுமாவார்.

இவரது அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் பின்னாளில் அரச நியமனம் பெற்று பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு பிரிவில் பணியாற்றி பல வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்த பெண்களுக்கான சுயதொழில் போதனாசிரியராக சேவை புரிந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வடமாகாணத்தின் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை அதிகாரியாக பதவி வகிக்கும், இத்துறை சார்ந்து 28 வருடங்களுக்கு மேலான அனுபவத்தினை கொண்டவர்.


பவானி ஆழ்வாப்பிள்ளைக்கு மூத்த அழக்கலை போதனாசிரியர் என்ற விருதினை வழங்கி கெளரவிப்பதில் அகில இலங்கை தமிழ் அழகுசிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் கௌரவப்படுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள