சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் !

You are currently viewing சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் !

கொழும்பில் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பெரும்பாண்மை இன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிக்கொட கடத்தப்பட்டு நேற்றுடன் 5000,நாட்களைக் கடந்த நிலையில் அவரது கடத்தல் தொடர்பான முழுமையான விசாரணை முன்னெடுக்கப் பட வேண்டும்,

அது ஒரு சர்வதேச விசாரணையாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும்

மட்டக்களப்பு உட்பட கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் ஒரு நீதியான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், ஆகியன ஒன்றிணைந்து மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத் தடியில் நேற்று (04.10.2023) புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஆர்ப்பாட்ட முடிவில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர்- பிரகீத் எக்னலிக்கொட ஏன் கடத்தப் பட்டார் எதற்காகக் கடத்தப் பட்டார் அவரது கடத்தலுக்கான காரணம் என்ன வென்பது கூடக் கண்டறியப்படவில்லை அவரைக் கடத்தியவர்கள் யார் என்பதைக் கூட சரியான விடயங்கள் வெளிப்படுத்தப் படவில்லை

கடந்த காலங்களில் இலங்கையின் நீதிப் பொறிமுறையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உரிய குற்றவாளிகள் இனங்காணப்பட்டும் அவர்களுக்கான முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப் படவில்லை இவ்வாறான நிலையிலேயே இவ்வாறான சர்வதேச விசாரணையைக் கோரி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments