சர்வாதிகாரமாக செயற்பட்டால் பாரதூரமான விளைவு ஏற்படும்!

You are currently viewing சர்வாதிகாரமாக செயற்பட்டால் பாரதூரமான விளைவு ஏற்படும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரமாக செயற்பட்டால் விளைவு பாரதூரமானதாக அமையும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகரில் போராட்டத்தில் ஈடுப்பட்டோம். அன்று எம்மீது பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்தில் ஆணைக்கமைய தாக்குதலை மேற்கொண்டார்கள்.பயங்கரவாத தடைச்சட்டம் எந்தளவிற்கு பாரதூரமானது என்பதை நாட்டு மக்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

யுத்த காலத்தில் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு பயங்கரவாத தடைச்சட்டம் செயற்படுத்தப்பட்டது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.இருப்பினும் இன்றும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது.

அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டால் தண்டனை கடுமையாக்கப்படும் என்பதை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் தீவிரவாதம் இல்லாத நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருத்தல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.போராட்டத்தினால் ஜனாதிபதியாகியவர் இன்று அந்த போராட்டத்தை தீவிரவாத செயற்பாடு என்று குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.அரசாங்கம் பாரிய குற்றமிழைக்கிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரமாக செயற்பட்டால் விளைவு பாரதூரமாக அமையும்.

சர்வக்கட்சி அரசாங்கம் என்பது சாத்தியமற்றது.அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி முறையற்ற வகையில் நிர்வாக கட்டமைப்பொன்று மாத்திரம் உருவாக்கப்படும்.பொருளாதார மீட்சிக்கான எந்த திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை,மாறாக பொருளாதார சுமை நடுத்தர மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

1 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments