சாதனை நிகழ்த்திய தமிழீழ மாணவ மாணவிகள்!

You are currently viewing சாதனை நிகழ்த்திய தமிழீழ மாணவ மாணவிகள்!

2019 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதி திறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இரு மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இரு மொழி மூலமும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

36 மாணவிகள் 8 பாடங்களில் அதி திறமைச்சித்தி (8ஏ), 36 மாணவிகள் 7 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (7ஏ), 37 மாணவிகள் 6 பாடங்களில் அதிதிறமைச் சித்தி (6ஏ) மற்றும் 21 மாணவிகள் 5 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (5 ஏ) பெற்றுள்ளனர்.

பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங் களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந் துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார். மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்யைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 250 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்கள், 250 பேரும் சித்தியடைந்து, கல்லூரிக்கு100 வீதம் சித்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். 26 மாணவர்கள் 9ஏ பெற்றுள்ளதுடன், அவர்களில் தமிழ் மொழி மூலம் 12 பேரும் ஆங்கில மொழி மூலம் 14 பேரும் அடங்குகின்றனர். 29 மாணவர்கள் 8ஏ பெற்றுள்ளனர். அவர்களில் தமிழ் மொழி மூலம் 13 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 16 மாணவர்களும் அடங்குகின்றனர்.

28 மாணவர்கள் 7ஏ பெற்றுள்ளனர், அவர்களில் தமிழ் மொழி மூலம் 13 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். ஏனைய மாணவர்கள் க.பொ.த. உயர்தரத்துக்கு தகுதி பெற்று சித்தியடைந்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள