சாந்தனின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை – சீமான்

You are currently viewing சாந்தனின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை – சீமான்

இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் என சாந்தனின் மரணம் குறித்து  நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்

சாந்தனின் உடலிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு முகாம் என்றால் அது சிறப்பு முகாம் ஆகிவிடுமா அது ஒரு வதைமுகாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

அதில் போய் சாந்தனை அடைத்துவைத்திருந்தார்கள்இரத்தஉறவுகள் தவிர வேறு யாரும் அங்கு அடைத்துவைக்கப்பட்டுள்ளவர்களை மனுக்கொடுத்து பார்க்கமுடியாது  நான் கூட மனுகொடுத்து போய்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாந்தனின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை - சீமான் 1

நீங்கள் இங்குவைத்து விடுதலை செய்யவில்லை என்றால் பொதுச்சிறையிலாவது அடைத்துவையுங்கள் என கேட்டோம்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை வழங்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட பேரறிவாளன் நளினி போன்றவர்கள் வெளியே உள்ளனர் அவர்களால் இந்த நாட்டில் சட்டமொழுங்கு பாதிக்கப்பட்டதாக என கேள்வி எழுப்பியுள்ள சீமான் எங்கு இருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர் நாங்கள் அவர்கள் தாய்தந்தையிடம் கேட்கவேண்டும் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என அவ்வாறான வாழ்க்கை வாழ்கின்றார்கள் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

ரொபேர்ட் பயாசை இரண்டு மாதங்கள் சிறைவிடுவிப்பில் விடுவித்தீர்கள் சமூகத்திற்கு சட்டமொழுங்கிற்கு கேடுவிளைவிக்கும் விதத்தில் அவர் நடந்துகொண்டாரா என கேள்வி எழுப்பியுள்ள சீமான் பேரறிவாளனிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்புதான் அனைவருக்கும் என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர் அப்படி எனும் போது அவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்வதற்கு நீங்கள் அனுமதித்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாந்தனுடைய கடைசி விருப்பம் கடைசியாக தாயை பார்த்து ஒருவாய் சோற்றை அவர் கையால் சாப்பிடவேண்டும் என்பதுதான்,அதைக்கூட நிறைவேற்றிவைக்கமுடியவில்லை  எனவும் குறிப்பிட்டுள்ள சீமான் இது ஒரு சட்டக்கொலை அவ்வளவுதான் நியாயமாக இது ஒரு கொலை இதனை ஒரு சட்டப்படி இடம்பெற்ற கொலை என்றுதான் தெரிவிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்,

இதே கருத்தையே சட்டத்தரணி புகழேந்தியும் தெரிவித்துள்ளார்

சாந்தன் உயிரிழந்த விவகாரமானது இயற்கை மரணமல்ல எனவும் அது இந்திய அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் சாந்தனின் மரணம் தொடர்பில்   ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் சட்டத்தரணி புகழேந்தி.

மேலும், ”ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியாவில் காணப்படும் திருச்சி சிறப்பு முகாம் என்பது இழுத்து மூடப்படவேண்டும்.

அண்ணன் சாந்தன் விட்டுச்சென்றுள்ள இந்த செய்தியானது உலகத்தில் கொடுமைகளை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசு அனுமதி வழங்கியும் கூட இந்திய அரசினால் சாந்தன் தனது தாய்நாட்டுக்கு அனுப்பப்படாமல் மரணித்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது.” என்றார்.

இவ்வாறான நிலையில் சாந்தனின் மரணத்தின் பின்னணி குறித்தும், சிறப்பு முகாம்களில் இலங்கை அகதிகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும், இந்திய அரசின் சட்டம் எவ்வாறான தாக்கங்களை உருவாக்கின்றது என்பது தொடர்பிலும் சட்டத்தரணி புகழேந்தி   தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments