சாந்தனின் மறைவு இந்திய இலங்கை அரசுகளின் மெத்தனப்போக்கே கஜேந்திரகுமார் எம்.பி ஆதங்கம்…!

You are currently viewing சாந்தனின் மறைவு இந்திய இலங்கை அரசுகளின் மெத்தனப்போக்கே கஜேந்திரகுமார் எம்.பி ஆதங்கம்…!

 

சாந்தன் நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட பின்னரும் இந்திய இலங்கை அரசுகளின் மெத்தனப்போக்கால் ஒன்றரை வருடம் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம்( 28) காலமானார் எனும் செய்தி எம்மக்கள் அனைவரையும் தாங்கொணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சாந்தனின் மறைவு தொடர்பில்  ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

33 வருடம் இந்திய மண்ணில், தனிமை சிறையில், போதிய மருத்துவ வசதிகள்  அடைக்கப்பட்டிருந்த  சாந்தன் , நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட பின்னரும் இந்திய இலங்கை  அரசுகளின்  மெத்தனப் போக்கால்  ஒன்றரை வருடம் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(28)  காலை காலமானார் எனும் செய்தி எம்மக்கள் அனைவரையும் தாங்கொணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

33 வருடங்களுக்கு பின்னர் தன் மகனின் முகத்தை காணும் ஏக்கத்தில் காத்திருந்த அவரின் தாயார் மற்றும் குடும்பத்தவர்களின் துயரினை எந்த வார்த்தைகளும் ஆற்றுப்படுத்தப்போவதில்லை.

அவரின் குடும்பத்தினரின் துயரில் நாமும் இணைந்து கொள்கிறோம்.கொடிய இன அழிப்புபோரினால் சிறிலங்கா , இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்புமுகாம்களிலும் ஆயிரக்கணக்கானோர்  தடுத்து வைக்கப்பட்டும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில், அவர்களை தேடி அலையும் எம் தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தனின் தாயார் இன்று இருக்கிறார்.இனியாவது, தடுத்துவைக்கப்பட்டவர்களினதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் விடுதலைகள் துரிதப்படுத்தப்படவேண்டும்.தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியே என அப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments