சிங்கள அரசு நடத்திய இன அழிப்பு தொடர்பில் ஐ.நாவில் சுட்டிக்காட்டிய பேர்ள் அமைப்பு!

You are currently viewing சிங்கள அரசு நடத்திய இன அழிப்பு தொடர்பில் ஐ.நாவில் சுட்டிக்காட்டிய பேர்ள் அமைப்பு!

சிங்கள பௌத்த பேரினவாதமே தொடர்ந்தும் இலங்கையில் முக்கிய இயங்குசக்தியாக காணப்படுகின்றது என இலங்கையில் சமத்துவம் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இங்கே மனித உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன எனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையின் பின்னர் இடம்பெற்ற பொது விவாதத்தில் பேர்ள் அமைப்பு, இலங்கையில் 15 வருடங்களிற்கு முன்னர் இழைத்த  மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழின அழிப்பு போன்றவற்றை நினைவுகூர்ந்தது. இங்கு தொடர்ந்தும் குறிப்பிட்ட விடயங்களாக

“இலங்கையில் இடம்பெற்ற அநீதிகளிற்கு இதுவரை நீதியோ பொறுப்புக்கூறலோ இல்லை,  169,796 தமிழர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது, அவர்கள் உயிரிழந்துவிட்டனர் என கருதப்படுகின்றது.

அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் நீதி ஆகியவற்றை முன்னெடுப்பதில் இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்த அரசியல் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை.

தற்போதைய அரசாங்கம் வெற்று நல்லிணக்க பொறிமுறைகளையே முன்வைக்கின்றது,  இந்தப் பொறிமுறை கடந்தகால உள்நாட்டுப் பொறிமுறைகளைப் போல பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளை தீர்க்கப்போவதில்லை, மோதல்களின் அடிப்படைகளுக்கு தீர்வை காணப்போவதில்லை.

அதேவேளை சிங்கள பௌத்த பேரினவாதமே தொடர்ந்தும் இலங்கையில் முக்கிய இயங்குசக்தியாக காணப்படுவதுடன் மனித உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை சாதனங்களால் தமிழர்களும் முஸ்லீம்களும் தொடர்ந்தும் பாதிக்கப்படுவார்கள்.

கடந்தகால குற்றங்களிற்கு அப்பால் பாரிய இராணுவமயப்படுத்தல், நினைவுகூரலை ஒடுக்குதல், தமிழர் தாயகப்பகுதிகளில் அதிகளவு சிங்களமயப்படுத்தல் போன்றவை காணப்படுகின்றன.

மோதல்களிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையில் ஸ்திரமின்மையை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் தமிழர்கள் தொடர்ச்சியாக சுயாதீன சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளிற்கும் சுயநிர்ணய உரிமைக்கும் வேண்டுகோள் விடுத்துவந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தை தமிழர்களிற்கு எதிரான குற்றங்களிற்கு பொறுப்புக்கூறச்செய்வதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற செய்தியை தெரிவிக்க முடியும்.”  எனவும் குறிப்பிட்டுள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments