சிறப்பாக நடைபெற்ற அனைத்துலக அறிவாடல் போட்டி 2023 | காணொளி

You are currently viewing சிறப்பாக நடைபெற்ற அனைத்துலக அறிவாடல் போட்டி 2023 | காணொளி

அனைத்துலக அறிவாடல் போட்டி 2023

அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் அனைத்துலக அறிவாடல் போட்டிகள் பல்வேறு நாடுகளினது கல்விக் கழகங்களின் பேராதரவுடன் இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அனைத்துலக மட்டத்தில், 21.10.2023 அன்று நடைபெற்ற இப்போட்டிகளில் நாடளாவிய போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

இணையவழியில் மெய்நிகர் ஊடாக நடைபெற்ற இப்போட்டிகளில் 2015 ஆம் ஆண்டில் பிறந்த மாணவர்கள் முதல் 2005 ஆம் ஆண்டில் பிறந்த மாணவர்கள் வரை கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் தமக்குரிய வயதுப்பிரிவினருடன் போட்டியிட்டு மிகச்சிறப்பாகத் தமது திறமையை வெளிப்படுத்தினார்கள்.

புலம்பெயர்ந்து வாழும் எம் அடுத்த தலைமுறை தமிழின வரலாற்றையும், பண்பாட்டு விழுமியங்களையும் எமது உரிமைக்கான போராட்டத்தின் உள்கிடக்கைகளையும் அது கடந்த வந்த பாதைகளையும் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த அறிவாடல் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. வினாவிடை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இப்போட்டிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, இம்முறை இரண்டாவது ஆண்டில் பெரும் எண்ணிக்கையிலான போட்டியாளர்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நிறைவேறியுள்ளது.

போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதல்மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை மதிப்பளிக்கும் முகமாக, அவர்களுடைய படங்கள் மற்றும் பதக்க நிலைகளை உள்ளடக்கிய காணொளி ஒன்றைத் தயாரித்துள்ளோம்.

வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்தும் அதேவேளை ஏனைய மாணவர்களும் வருங்காலத்தில் ஈடுபாட்டுடன் அறிவாடல் போட்டிகளில் பங்குபற்ற பங்குபற்ற வேண்டும். அதன்மூலம் எமது வரலாறு அடுத்த தலைமுறைக்குச் சென்றடைய வேண்டும் என்பதே இக்காணொளி உருவாக்கத்திற்கான முதன்மைக் காரணம். எனவே இந்நோக்கத்தைக் கருத்திற்கொண்டு இங்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியை தமது ஊடகத்தில் ஒளிபரப்பி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

அறிவாடல் ஒருங்கிணைப்புக்குழு

சிறப்பாக நடைபெற்ற அனைத்துலக அறிவாடல் போட்டி 2023 | காணொளி 1

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments