சிறீலங்காவால் புதிய ஊரடங்கு சட்டம் விபரம்!

You are currently viewing சிறீலங்காவால் புதிய ஊரடங்கு சட்டம் விபரம்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

 குறித்த 21 மாவட்டங்களிலும் நேற்றிரவு இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது.  ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

 நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

 இந்தநிலையில், அந்த மாவட்டங்களில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிவரை நாளாந்தம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும்.

 இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் படி முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் குறுகிய கால விடுமுறைகள் என்பன மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்;டுள்ளது.

 இதேவேளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 அத்துடன் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய அடையாள அட்டை திட்டதுக்கு அமைய புதன்கிழமைக்கான தேசிய அடையாள அட்டையி;ன் 5 அல்லது 6 என்ற இறுதி இலக்கங்களை கொண்டவர்கள் மாத்திரம் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேற முடியும்.

 மக்களின் நடமாட்டத்தை குறைக்கும் அடிப்படையில் அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் இன்று இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

 கொரோனா இடர்வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துநை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 4ம் திகதி வரையில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.                        

பகிர்ந்துகொள்ள