சிறீலங்காவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த எட்டு நாட்களில் மட்டும் 515 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் அசேல குணவர்த்தனவை மேற்கோள்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டு வரும் நாளாந்த கொவிட்-19 உயிரிழப்பு விபரங்களின் அடிப்படையில் குறித்த மரணஙங்கள் கணிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 உயிரிழப்புகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டிருந்த எண்ணிக்கை வெளியிடப்பட்ட திகதி அடிப்படையில்
ஜூன் – 10 ஆம் திகதி – 101 பேர்
ஜூன் – 11 ஆம் திகதி – 62 பேர்
ஜூன் – 12 ஆம் திகதி – 63 பேர்
ஜூன் – 13 ஆம் திகதி – 67 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-12 இல் நிகழ்ந்துள்ளன)
ஜூன் – 14 ஆம் திகதி – 57 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-13 இல் நிகழ்ந்துள்ளன)
ஜூன் – 15 ஆம் திகதி – 55 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-14 இல் நிகழ்ந்துள்ளன)
ஜூன் – 16 ஆம் திகதி – 59 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-15 இல் நிகழ்ந்துள்ளன)
ஜூன் – 17 ஆம் திகதி – 51 பேர் (குறித்த மரணங்கள் ஜூன்-16 இல் நிகழ்ந்துள்ளன)
என இவ்வாறு கடந்த 8 நாட்களில் மட்டும் 515 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 12ஆம் திகதியில் இருந்து நாளாந்த கொவிட்-19 மரணங்கள் உடனுக்கு உடன் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த 5 நாட்களில் மட்டும் நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 289 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 51 கொவிட்-19 மரணங்கள் தொடர்பில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 2425 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.