இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இவர் சுற்றுலா வழிகாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.