சிறீலங்கா பாராளுமன்றம் நாளை கலைக்கப்படுகிறது!

You are currently viewing சிறீலங்கா பாராளுமன்றம் நாளை கலைக்கப்படுகிறது!

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தனக்குள்ள நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி நாளை திங்கட்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தின் பெப்ரவரி மாதத்திற்கான மாத இறுதி அமர்வு கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றதுடன் அதனை தொடர்ந்து பாராளுமன்றம் நாளை மறுதினம் 3ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் நாளை 2 ஆம் திகதி நள்ளிரவுடன ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான சட்ட ரீதியான அதிகாரம் கிடைக்கும் நிலையில் நாளை நள்ளிரவுடன் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய உறுப்பினர்கள் பலர் இதுவே இறுதி பாராளுமன்ற கூட்டம் எனவும் அடுத்த அமர்வுக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிடுமெனவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

அத்தோடு, இதேவேளை சபாநாயகர் கருஜயசூரிய கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இன்னும் 48 மணி நேரத்திற்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படலாமெனவும் தெரிவித்திருந்தார்.

5 வருடங்களை கொண்ட தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரையில் இருக்கின்ற போதும் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் 4 1/2 வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அதன்படி நாளை நள்ளிரவுக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தங்களை மும்முரமாக மேற் கொண்டுவருகின்றமையினால், நாளை நள்ளிரவுடன் பெரும்பாலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது

பகிர்ந்துகொள்ள