சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் மக்கள் போராட்டம்!

You are currently viewing சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் மக்கள் போராட்டம்!

அண்மையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று வவுனியா தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 17 ஆம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்த பொதுமக்கள், மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக சென்று ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments