முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மகளிர் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களின் எதிர்காலத்தை சிதைக்காதே, வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம், பாதுகாப்போம் பாதுகாப்போம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம், மலையகச் சிறுமிக்கு நீதி வேண்டும், பாலியல் வன்முறை வேண்டவே வேண்டாம், பாதுகாப்போம் பாதுகாப்போம் சிறுவர் உரிமையைப் பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் புதிய ஜனநாயக அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் செந்தில்வேல் உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)