பிரித்தானியாவில் கண்டறியப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும், பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ், பெரியவர்களில் பார்க்க சிறுவயதினரிடையே அதிவிரைவாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Imperial College London” என்ற பிரித்தானிய அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையொன்றில் இது தெளிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், பெரியவர்களைவிட, 0 இலிருந்தது 19 வரையிலான வயதுடையவர்களிடையே இப்பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ் விரைவாக பரவுவதாகவும் அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- 20 வயதுக்கும் குறைந்தவர்களிடையே இப்பிறழ்வடைந்த வைரஸ் பரவுவதற்கு உயிரியல் கரணங்கள் இருக்கலாமெனவும்…
- “கொரோனா” பாதிப்பால் நாடுகள் முடக்க நிலையில் இருந்தாலும், பாடசாலைகள் வழமைபோல் இயங்கியதால் இளவயதினரிடையே இது அதிகரித்திருக்கலாமெனவும்…
- வழக்கமாகவே இளவயதினரிடையே தொற்றுக்கான அறிகுறிகள் விரைவாக வெளிப்படுவதால், அதிகளவிலான இளவயதினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால், பாதிக்கப்படும் இயவயதினரின் தொகை அதிகரித்திருக்கலாமெனவும்…
கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.