சிவப்பு எறும்பு சட்னி கொடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து இந்திய உச்ச நீதிமன்றம்!

You are currently viewing சிவப்பு எறும்பு சட்னி கொடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து இந்திய உச்ச நீதிமன்றம்!

கொரோனாவை ஒழிக்க நாட்டிலுள்ள அனைவருக்கும் சிவப்பு எறும்பு சட்னி கொடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரர்களை தடுப்பூசி எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட்டு வருகின்றனர். இந்த சிவப்பு எறும்புகள் உடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதைத் தேங்காய் சட்னி போல பயன்படுத்துகிறனர்.

இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்தாக இதனை பரிந்துரைக்க வேண்டும் எனவும் கோரி இந்திய உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.வை. சந்திரசூட், விக்ரம் நாத் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு பாரம்பரிய மருந்துகள் நிறைய உள்ளன. இவற்றையெல்லாம் கொரோனாவிற்கு மருந்தாக பயன்படுத்த முடியாது என தெரிவித்தனர்.

இந்த எறும்பு சட்னியை நீங்கள் உங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் இந்த எறும்பு சட்னியை நாங்கள் கொடுக்க உத்தரவிட முடியாது எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

மேலும் ஒடிசா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்த மனுதாரர் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என கூறி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments